செய்திகள்

புதிய அரசின் மேல் ஏற்­பட்ட மாற்றம் கீழ் மட்டம் வரை செல்­ல­வில்லை: யாழ்ப்பாணத்தில் மனோ

புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­கு­வ­தற்கு அர­சிற்கு கால அவ­காசம் வழங்கும் அதே­நே­ரத்தில் காணி அப­க­ரிப்பு மற்றும் ஜன­நா­யக விரோத செயற்­பாட்­டிற்கு எதி­ராக ஜன­நா­யக போராட்­டங்­களை முன்­னெ­டுக்க வேண்டும் என அமைச்சர் மனோ ­க­ணேசன் தெரி­வித்தார். தெற்கில் ஒற்­றை­யாட்சி என்று கூறும்­போது வடக்கில் சமஷ்டி என்று கோரும் உரிமை இருக்­கி­றது என்றும் அவர் குறிப்­பிட்டார்.

தமி­ழீழ விடு­தலை இயக்­கத்தின் தலைவர் சிறி சபா­ரத்­தினம் மற்றும் போரா­ளி­களின் 30ஆம் ஆண்டு நினை­வஞ்­சலி பொதுக்­கூட்டம் நல்லூர் இளங்­க­லைஞர் மண்­ட­பத்தில் நேற்று நடை­பெற்­றது. அந்­நி­கழ்வில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இத­னைத்­தெ­ரி­வித்தார். அங்­கு­மேலும் உரை­யாற்­று­கையில்,

“எதிர்­கா­லத்தில் எத்­த­கைய இலக்கை அடை­யப்­போ­கின்றோம் என்­பதை கருத்­திற்­கொண்டு இன்­றைய நிலையில் உள்­ள­வர்கள் கடந்­த­கால அனு­ப­வங்­களை கொண்டு முன்­ந­கர வேண்டும். அந்த ஒற்­றுமை தேவை­யாக உள்­ளது. வடக்கு மாகாண சபையின் தீர்வுத் திட்ட வரைபு தொடர்பில் தெற்கில் இன­வாதம் கக்­கப்­பட்டு வந்­தாலும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால மேதினக் கூட்­டத்தில் கலந்­து­கொண்­ட­போது வடக்கில் சமஷ்டி கோரிக்கை முன்­வைக்­கப்­ப­டு­கி­றது என்றால் ஏன் முன் வைக்­கப்­ப­டு­கி­றது என்­பதை சிந்­திக்க வேண்டும் என கூறி­யி­ருந்தார். அதன் அர்த்தம் வட­கி­ழக்கு மாகா­ணத்­திற்­கான சமஷ்டி கோரிக்­கையை ஏற்­றுக்­கொண்­ட­தாக இல்லை. அந்த கோரிக்­கையை பேச்­சு­வார்த்­தை­யாக ஒரு கலந்­து­ரை­யா­ட­லாக சிந்­திப்­ப­தால்தான் மே தினத்தில் அவ்­வாறு கூறி­யுள்ளார்.

சமஷ்டி கோரிக்­கையை முன்­வைப்­ப­தற்கு முழு­மை­யான உரிமை இருக்­கி­றது. இறை­மையை ஆட்­புல ஒரு­மைப்­பாட்டை உடைத்து தனி­மா­நி­ல­மாக அமைக்­கப்­போ­வ­தில்லை. ஐக்­கி­யப்­பட்ட ஒற்­று­மைப்­பட்ட நாட்­டுக்­குள்தான் நாங்கள் அதி­பட்ச அதி­கா­ரத்தை பகி­ர­வுள்ளோம் என்­ப­தைத்தான் தமிழ்­தே­சி­யக்­கூட்­ட­மைப்பு 2005 ஆம் ஆண்டு தேர்­தலில் முன்­வைத்­துள்­ளது. இந்த ஆணையை கூட்­ட­மைப்பு மீறவும் இல்லை. தெற்கில் உள்­ள­வர்கள் ஒற்­றை­யாட்சி என்று கூறு­வார்­க­ளானால் அதே உரிமை வடக்கில் கிழக்கில் இருக்கும் தமிழ் மக்­க­ளுக்கு சமஷ்டி கோரிக்கை முன்­வைக்கும் உரிமை உள்­ளது.

அர­சியல் அமைப்பு என்­பது மக்­களால் உரு­வாக்­கப்­ப­டு­வ­தாகும். அதற்கு உதா­ரணம் தற்­போது பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ஒய சபை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. புதிய அர­சி­ய­ல­மைப்பை உரு­வாக்­க­கூ­டிய சூழல் உரு­வா­கி­வ­ரு­கி­றது. இதற்­காக குழு செயல்­ப­டு­கி­றது. சமஸ்டி கோரிக்கை எடு­ப­டா­விட்டால் ஏன் எடு­ப­ட­வில்லை என்று கூற­வேண்டும். முடி­யாது ஒன்று சொல்ல வேண்டும். ஆனால் இந்த கோரிக்­கையை கேட்­க­கூ­டாது பேசக்­கூ­டாது என்று சொல்­வ­தற்கு எந்த கொம்­ப­னுக்கும் தெற்கில் உள்­ள­வர்­க­ளுக்கும் உரிமை கிடை­யாது.

இரா­ணுவ மயப்­ப­டுத்தல், காணி அப­க­ரிப்பு என்­பன எமது அர­சாங்­கத்தின் கொள்கை கிடை­யாது. மாறாக புதிய அரசின் மேல் ஏற்­பட்ட மாற்றம் கீழ் மட்டம் வரை செல்­ல­வில்லை. அந்த கார­ணத்தால் அர­சாங்­கத்தின் கொள்கை நிலைப்­பா­டுகள் வழி­காட்­டல்கள் மீறி இரா­ணுவம் பொலிஸ் அதி­கா­ரிகள் தன்­னிச்­சை­யாக தான்­தோன்­றி­த­ன­மாக நடந்து கொள்­கி­றார்கள்.

இதற்கு மாற்று வழி­யாக தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பு மற்றும் ஏனைய தமிழ்­கட்­சிகள் இத்­த­கைய செயற்­பாட்­டிற்கு எதி­ராக ஜன­நா­யக போராட்­டத்தை முன்­னெ­டுங்கள். இத்­த­கைய கையப்­ப­டுத்தல், அப­க­ரிப்­பு­களை தொடர்பில் ஊட­கங்­க­ளுக்கு மட்டும் மட்­டுப்­ப­டுத்­தாது சர்­வ­தேச ரீதியில் எடுத்து செல்­ல­வேண்டும்.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் தேசி­ய­கூட்­ட­மைப்பு சிவில் அமைப்­புகள் மாகா­ண­சபை ஏனைய உள்­ளூ­ராட்சி மற்றும் உறுப்­பி­னர்கள் பொது அமைப்­புகள் சேர்ந்து ஜன­நா­யக போராட்­டங்­களை முன்­னெ­டுக்­க­வேண்டும். இதன்­மூ­ல­மா­கதான் தேசிய ரீதியில் சர்­வ­தேச ரீதியில் கவ­ரப்­படும் அடி­பட்ட அதி­கார வர்­கத்தை தடுக்­க­மு­டியும்.

கடந்த வாரம் கூட்­ட­மைப்பு தலைவர் பர­வி­பாஞ்சான் இரா­ணு­வ­மு­கா­மிற்கு சென்றார் என்று கோச­மிட்­டார்கள். இவர்கள் மீளவும் ஆட்­சி­யல்­அ­மர்­வ­தற்­காக இத்­த­கைய செயலை செய்­கி­றார்கள். ஆனால் இதற்கு எதி­ராக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இத்­த­கைய பிரச்­ச­னை­களை செய்ய வேண்டாம் என கண்­டித்­த­துடன் மக்­களின் காணி­களை பார்­வை­யிட்­டாரே தவிர இரா­ணு­வ­மு­காமை உடைத்து போக­வில்லை என்று கூறினார். தற்­போது புலிகள் இல்லை. எறி­கணை இல்லை என்றால் அதி­உயர் பாது­காப்பு வலயம் தேவை­யில்லை. அந்த அடிப்­ப­டையில் மக்­க­ளிடம் அவர்கள் காணிகள் ஒப்­ப­டைக்க வேண்டும்.

எல்லாம் நடந்­து­விட்­டது. காணி கிடைத்­து­விட்­டது என்று சொல்ல நான் பொய்­ய­னல்ல. ஆனால் ஒன்­றுமே நடக்­க­வில்லை என்று கூறு­வ­தையும் ஏற்க முடி­யாது. ஒரு நகர்வு இருக்­கி­றது. அது மெது­வாக இருக்­கி­றது. வேகம் இல்லை என்று சொல்­லலாம். தெற்கில் ஒற்­றை­யாட்சி என்று கூறும்­போது வடக்கில் சமஸ்டி என்று கோரும் உரிமை இருக்­கி­றது.

புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வா­கா­வுள்­ளது. அதில் வட­கி­ழக்கு இணைந்த தமிழர் தாய­கத்தில் சமஷ்டி அடிப்­ப­டை­யி­லான அதி­கா­ரப்­ப­கிர்வு தர வேண்டும் என்ற கோரிக்­கையை தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பும் வட­மா­காண சபையும் முன்­வைப்­ப­தாக நினைக்­கின்றேன். இந்த இலக்கை அடை­வ­தற்கு கூட்­ட­மைப்பு, வடமாகாணசபையும் அழுத்தம் வழங்கவேண்டும்.

அதேவேளை அந்த செயற்பாட்டை செய்ய அவகாசத்தை அரசாங்கத்துக்கு வழங்கவேண்டும். அதன் அர்த்தம் போராட்டத்தை ஊர்வலத்தை நிறுத்துங்கள் என்று சொல்லவில்லை. செயய்யுங்கள் அச்சம் பயம் வரும். இரண்டையும் சமாந்தரமாக செய்யுங்கள். கூட்டமைப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் மறுபுறத்தில் ஜனநாயக போராட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டும் இரண்டுக்கும் முரண்பாடு வேண்டாம். வரலாறுகளை திரும்பி பார்க்கவேண்டும் அதன் மூலமே கடந்த தவறுகளை விடாது ஒற்றுமையுடன் செயல்படமுடியும் என்றார்.
R-06