புதிய அரசியலமைப்பில் கட்சித் தாவலுக்கு தடை?
தயாரிக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் மக்கள் பிரதிநிதிகள் கட்சி தாவுவதை தடுக்கும் வகையில் விசேட ஏற்பாடுகளை உள்ளடக்குவது தொடர்பாக ஆராயப்பட்டு வருகின்றது.
இது தொடர்பாக தற்போது அரசியலமைப்பு தயாரிப்பு குழுவினருடன் அரசாங்கத்தினர் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேர்தல் முறை திருத்தத்திற்கு சமாந்திரமாக இந்த சரத்தையும் உள்ளடக்கும் வகையிலேயே கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பாராளுமன்ற மற்றும் மாகாண சபைகள் உள்ளிட்ட சபைகளில் அங்கம் வகிக்கும் மக்கள் பிரதிநிதிகள் தாம் அந்த சபைக்கு தெரிவான கட்சியிலிருந்து வேறு கட்சிக்கு தாவினால் அவரின் அந்த சபையின் உறுப்பினர் பதவியிலிருந்து விலக்கும் வகையிலேயே இந்த சரத்தை உள்ளடக்குவதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. -(3)




