புதிய அரசியலமைப்பில் பௌத்தம் தொடர்பான சரத்தை மாற்ற எந்த கட்சியும் கோரிக்கை விடுக்கவில்லை
தயாரிக்கப்படவுள்ள புதிய அரசியலமப்பில் தற்போதைய அரசியலமைப்பிலுள்ள பௌத்தம் தொடர்பான சரத்தை மாற்றுவதற்கு எந்தவொரு கட்சியும் கோரிக்கை விடுக்கவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கான உரிய இடத்தை அகற்றுவதற்கு தற்போதைய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ளவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
யாப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அரசாங்கத்திற்கு தேவை தற்போதைய அரசாங்கத்தின் கீழ் பொதுமக்களுக்கு இதற்கான அதிகாரம் கிடைத்துள்ளது இதற்கான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளார்.
நுகேகொட ஹங்கொடவில பெக்கிரிவத்த ஸ்ரீ விவேகாராம விகாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)




