செய்திகள்

புதிய அரசியலமைப்பு தொடர்பில் கூட்டமைப்பு ஆராய்கிறது

புதிய அரசியல் யாப்பு தயாரிப்பு, தீர்வுத் திட்டம் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முக்கிய கலந்துரையாடல் இன்று வவுனியாவில் உள்ள விருந்தினர் விடுதி ஒன்றில் இடம்பெற்று வருகிறது.
எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தன் தலைமையில் இக் கலந்துரையாடல் இடம்பெறுகிறது.
இந்த சந்திப்பின்போது, புதிய அரசியலமைப்பு, வெளிநாட்டு பிரதிநிதிகளுடனான சந்திப்புக்கள் தொடர்பாகவும், கட்சியின் எதிர்க்கால செயற்பாடுகள் தொடர்பாகவும் ஆராயப்படவுள்ளன. இக்கலந்துரையாடலில் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், சி.சிறிதரன், சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன்,  சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா, சார்ள்ஸ் நிர்மலநாதன், யோகேஸ்வரன், சரவணபவன், சிறிநேசன் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் வடக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர்கள் அமைச்சர்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.
இதேவேளை, இக்கலந்துரையாடலில் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் அவர்கள் கலந்து கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
DSC02436 copy IMG_6975 copy IMG_6984 copy IMG_7000 copy
N5