செய்திகள்

”புதிய அரசியலமைப்பை தயாரிப்பவர் விக்னேஸ்வரன் அல்ல” : பிரதமர்

புதிய அரசியலமப்பு அமையும் முறையை தீர்மானிப்பவர் வடக்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் அல்ல என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் விக்னேஸ்வரனால் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பாக பாராளுமன்ற உறுப்பினர் தினேஸ்குணவர்தனவினால் பாராளுமன்றத்தில் எழுப்பப்பட்டிருந்த கேள்வியொன்றுக்கு நேற்று பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பை அமைக்கும் பணகள் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கு ஒவ்வொருவரும் யோசனைகளை முன்வைக்கின்றனர். அவற்றை ஆராய்ந்து கட்சிகளுடன் கலந்துரையாடி அதனை செய்வோம். எவ்வாறாயினும் அதனை தயாரிப்பவர் முதலமைச்சர் அல்ல . என்பதனை தெரிவித்துக்கொள்கின்றேன். என அவர் தெரிவித்துள்ளார். -(3)