செய்திகள்

புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தியது ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபோன் மாடல்கள்,மற்றும் டி.வி., ஐபேட் ஆகிய சாதனங்களை அறிமுகப்படுத்தியுள்ளன. 699 டாலர் முதல் 1099 டாலர் வரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
மொபைல் போன் தயாரிப்பில் முன்னணி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம், வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில், புதிய மாடல் ஐபோன்களை விற்பனைக்கு அறிமுகப்படுத்தும். அந்த வகையில் இந்தாண்டும் புதிய ஐபோன் மாடல்களை அறிமுகப்படுத்தியள்ளது. அது மட்டுமின்றி டி.வி. மற்றும் ஐபேட் ஆகிய சாதனங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் கியூபர்டினோ நகரில் உள்ள ஸ்டீவ் ஜாப்ஸ் தியேட்டரில் நடந்த நிகழ்ச்சியில் ஆப்பிள் நிறுவனத்தின் தலைவர் டிம் குக் , ஐபோன் 11, ஐபோன் 11 புரோ , ஐபோன்11 புரோ மேக்ஸ் ஆகிய மாடல்களை அறிமுகம் செய்து அதன் சிறப்பம்சங்களை விளக்கினார்.ஆர்கேட் கேமிங் சேவையுடன் ஆப்பிள் டி.வி. யும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் புதிய பிளஸ் மாடல் 100 நாடுகளில் கிடைக்கும். இதற்கான மாத கட்டணம் 4.99 டாலர்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.gallerye_002520811_2364090

2019-ம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனம் புதிய ஐபேட் மாடலை அறிமுகம் செய்தது. இருமடங்கு வேகமான பிரெளசர் கொண்ட இந்த புதிய ஐபேட் வாங்குவோருக்கு ஆப்பிள் டி.வி. பிளஸ் சேவை ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்கப்படுகிறது. புதிய ஐபேட் துவக்க விலை 329 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.(15)