புதிய கட்சியில் மகிந்த போட்டியிட வேண்டும்: வாசு சொல்கிறார்
எதிர்வரும் பொதுத்தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புதிய கட்சியில் இணைந்து போட்டியிடுவது அவசியமென இடதுசாரி முன்னணியின் தலைவர் வாசுதேவ நாணயக்கார ஆங்கில ஊடகமொன்றுக்கு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் –
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பு தோல்வியுற்றமையினால் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச புதிய கட்சியினூடாக தேர்தலில் போட்டியிட வேண்டும்.
எனினும் புதிய கட்சியின் சின்னம் மற்றும் பெயர் பற்றி இதுவரை தீர்மானிக்கப்படவில்லை. மகிந்த பிரதமர் வேட்பாளராக நியமிக்கப்படாவிட்டால் மைத்திரி – மகிந்த சந்திப்பை தொடர்ந்து நடத்துவது அநாவசியம். மகிந்த ராஜபக்ச இன்றி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு போதும் வெற்றி பெற முடியாதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.




