புதிய கட்சியை அமைத்தால் இரகசியங்களை வெளியிடுவேன் : மகிந்தவை எச்சரிக்கும் மைத்திரி
புதிய கட்சி ஆரம்பிக்கப்படுமாகவிருந்தால் சகல இரகசியங்களையும் வெளியிடுவேன் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மகிந்த ராஜபக்ஷ அணியினருக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இன்று மாத்தறையில் நடைபெற்ற தேசிய அரசாங்கத்தின் ஓராண்டு பூர்த்தி விழாவில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அரசாங்கத்தை கவிழ்க்க புதிய கட்சியை அமைக்கப் போகின்றார்களாம். அந்தக் கட்சியை அமைக்கட்டும். கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது நாங்கள் பல்வேறு தகவல்களை வெளியிட்டிருந்தோம் அதே போன்று புதிய கட்சி அமைக்கும் அன்றைய தினமே இது வரை வெளியிடாது வைத்திருந்த இரகசியங்களை வெளியிட்டு அவர்களுக்கு நிரந்தரமாகவே அரசாங்கத்தை அமைக்க முடியாது வீதியிலேயே நடந்து திரியும் நிலைமையை உருவாக்குவோம். என்பதனை தெரிவித்துக்கொள்கின்றோம். என அவர் தெரிவித்துள்ளார். -(3)




