செய்திகள்

புதிய கட்சியை அமைத்தே தீருவோம் : பஸில்

நிச்சயமாக புதிய கட்சியை ஆரம்பிப்போம் என முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வழக்கு விசாரணையொன்றுக்காக வருகை தந்திருந்த அவரிடம் ஊடகவியலாளர்கள் அமைக்கப்படவுள்ள புதிய கட்சி தொடர்பாக கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நிச்சயமாக புதிய கட்சி உருவாகும் அடுத்த தேர்தலில் புதிய சின்னத்தில் நாம் போட்டியிடுவோம். என அவர் தெரிவித்துள்ளார்.  -(3)