புதிய கட்சி இப்போதைக்கு இல்லை: டிசெம்பர் வரை ஒத்திவைக்க மகிந்த அணி முடிவு
புதிய கட்சி அமைப்பதை கூட்டு எதிரணி அடுத்த வருட முற்பகுதி வரையில் ஒத்திவைத்திருப்பதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. கொழும்பு அரசியலில் அண்மைக்காலத்தில் ஏற்பட்டுள்ள மாற்றங்களையடுத்தே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
புதிய கட்சி ஒன்றை அமைப்பதற்கான பெரும்பாலான வேலைகளை கூட்டு எதிரணி பூர்த்தி செய்திருந்த அதேவேளையில், கட்சிக்கான யாப்பைத் தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டிருந்தது. புதிய கட்சிக்கான பெயரைத் தெரிவு செய்வதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
இருந்த போதிலும், டிசெம்பர் மாதம் வரையில் இந்தப் பணிகளை ஒத்திவைத்துவிட்டு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளை அவதானிப்பதற்கு கூட்டு எதிரணி இப்போது தீர்மானித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.:06




