செய்திகள்

புதிய சிறைக் காவலர்கள் நியமனம் இடைநிறுத்தம் : நேர்முக தேர்வில் ஊழல்?

சிறைச்சாலைகள் திணைக்களத்தினால் சிறைச்சாலைகளுக்கென புதிதாக நியமிக்கப்படவிருந்த 350 சிறைக்காவர்களுக்கான நியமனத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சிறைச்சலைகள் ,மீள் குடியேற்றம் , புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவககாரங்கள் அமைச்சர் டீ.எம்.சுவாமிநாதன் தீர்மானித்துள்ளார்.
சிறைக் காவல்களுக்கான நேர்முகப்பரீட்சையின் போது ஊழல் , மோசடிகள் இடம்பெற்றுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளையடுத்தே அமைச்சர் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி குறித்த முறைப்பாடுகள் தொடர்பாக முறையான விசாரணைகளை நடத்தி யாரோனும் அதிகாரிகள் மோசடிகளில் ஈடுபட்டிருந்தால் அந்த அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கையெடுப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மீண்டும் இரண்டாவது தடவையாக முறையாக நேர்முகப்பரீட்சைகளை நடத்தி அந்த நியமனங்களை வழங்க நடவடிக்கையெடுக்கப்படுமென சிறைச்சலைகள் ,மீள் குடியேற்றம் , புனர்வாழ்வு மற்றும் இந்துமத விவககாரங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. -(3)