செய்திகள்

புதிய நிதி அமைச்சர் யார்?

21 ஆவது அரசியலமைப்பு திருத்தத்திற்கமைய ஜனாதிபதிக்கு பாதுகாப்பு அமைச்சை தவிர வேறு அமைச்சுப் பதவிகளை வகிக்க முடியாது என்பதனால், அவரிடம் உள்ள நிதி அமைச்சுக்கு புதியவர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளார்.

பெரும்பாலும் புதிய நிதி அமைச்சராக அலி சப்ரி நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அதனை அலி சப்ரிக்கு வழங்க இணக்கம் தெரிவித்துள்ளார்.

தற்பொழுது வெளிவிவகார அமைச்சராக அலி சப்ரி செயற்படுகின்றமை குறிப்பிடதக்கது.

-(3)