செய்திகள்
புதுடெல்லியில் குண்டு வெடிப்பு: பலர் பலி!
இந்தியா தலைநகர் புதுடெல்லியில் செங்கோட்டை அருகேயுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் 1வது நுழைவு வாயில் அருகே இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் 14 பேர் பலியாகி உள்ளனர்.
இதேவேளை 24 பேர் காயமடைந்துள்ளனர்.
காயமடைந்தவர்கள் டில்லியில் உள்ள லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.




