புத்தர் சிலை நல்லாட்சிக்கு தடையென்றால் அமைச்சியிலிருந்து விலக தயார் : தயாகமகே
புத்தர் சிலையை அமைப்பது நல்லிணகத்துக்கும் , நல்லாட்சிக்கும் பாதிப்பு என யாரேனும் கூறுவார்களாக இருந்தால் அமைச்சுப் பதவியை துறக்க தான் தயார் என அமைச்சர் தயாகமகே தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற அம்பாறை மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தின் போது மணிக்கமடு புத்தர் சிலை விவகாரம் தொடர்பாக எழுந்த பிரச்சினைகளையடுத்தே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறுபான்மையின மக்கள் வாழும் பகுதியில் புத்தர் சிலை வைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படும் நிலையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
” சகல மதத் தலைவர்களும் பௌத்த மதத்திற்கு முன்னிலை கொடுக்க இணக்கம் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புத்தர் சிலையை வைக்க முடியாது என யாரேனும் கூறினால் அதற்கு இணங்க முடியாது. இவ்வாறு புத்தர் சிலையை வைத்தால் அது நல்லாட்சிக்கும் நல்லாட்சிக்கும் பாதிப்பு ஏற்படுமென யாரேனும் கூறினால் நான் அமைச்சுப் பதவியை துறந்து வீட்டுக்கு செல்வேன். இந்நிலையில் புத்தர் சிலை அமைக்க யாரேனும் உதவி கேட்டு வந்தால் அதற்கு சாது சாது என கூறி பணத்தை வாரி வழங்குவேன்” என அவர் தெரிவித்துள்ளார். -(3)




