செய்திகள்
புத்தளம் பகுதியில் 17 வயது மாணவி வல்லுறவு : காதலன் உட்பட மூவர் கைது
புத்தளம் செவ்வந்தீவு பிரதேசத்தில் 17 வயதுடைய பாடசாலை மாணவியை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியதாகக் கூறப்படும் மாணவியின் காதலன் உட்பட மூன்று இளைஞர்களை புத்தளம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
புத்தளம் செவ்வந்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள தென்னந்தோட்டம் ஒன்றில் வைத்தே மாணவி இவ்வாறு வல்லுறவுக்குட்படுத்தப்பட்டிருப்பதாக புத்தளம் பொலிஸார் தெரிவித்தனர். கல்லடி பிரதேசத்தைச் சேர்ந்த இம் மாணவியின் காதலனான 24 வயது இளைஞனுடன் புத்தளம் செவ்வந்தீவு பிரதேசத்தைச் சேர்ந்த 19 மற்றும் 21 வயதுடைய இளைஞர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 5ஆம் திகதி இம் மாணவி புத்தளம் நகரில் அமைந்துள்ள தனியார் கணனி பயிற்சி நிலையத்திற்குச் சென்று வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மாணவியின் காதலன் அவளை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு புத்தளம் செவ்வந்தீவு பிரதேசத்தில் அமைந்துள்ள தென்னந்தோட்டம் ஒன்றிற்குச் சென்று அங்கு அவளை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியுள்ளார்.
இதனை அங்கு மறைந்திருந்த மற்றைய இரு இளைஞர்களும் தங்களது கைப்பேசியில் வீடியோ எடுத்து அதனை மாணவி மற்றும் அவளது காதலனிடம் காட்டி அதனை இணையத்தில் பதிவேற்றப் போவதாக பயமுறுத்தியுள்ளனர். இதனையடுத்து மாணவியின் காதலன் அவளை அங்கு கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இதனையடுத்து மாணவியை மற்றைய இரு இளைஞர்களும் மாறி மாறி பல தடவைகள் வல்லுறவுக்குட்படுத்தியதாக மாணவி பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
இவர்களால் கூட்டு வல்லுறவுக்குட்படுத்தப்பட்ட மாணவி புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்




