செய்திகள்

புத்தாண்டு காலத்தில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 51 பேர் உயிரிழப்பு

தமிழ் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 51 பேர் உயிரிழைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 10ஆம் திகதி முதல் நேற்று 16ஆம் திகதி வரையான 6 நாட்களில் இடம்பெற்ற 49 வாகன விபத்துக்களிலேயே இவர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை இந்த காலப்பகுதியில் மது போதையில் வாகனங்களை செலுத்திய 1546 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
n10