புலனாய்வுப் பிரிவின் தலைவரை அகற்றும் சதியில் அமெரிக்க சம்பந்தம்: ஞானசாரர் குற்றச்சாட்டு
தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவரை அப்பதவியிலிருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்படும் சதித் திட்டத்தின் பின்னணியில் அமெரிக்கா இருப்பதாக பொது பல சேனாவின் பொதுச் செயலாளர் ஞானசார தேரோ குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.
இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே சிவில் சமூகத்தைச் சேர்ந்த பேராசிரியர் சரத் விஜயசூரிய இதற்கான அழுத்தங்களை அரசாங்கத்துக்குக் கொடுத்துவருகின்றார் எனவும் கொழும்பில் நேற்று நடத்திய ஊடகவியலாளர் மாநாடு ஒன்றில் ஞானசார தேரர் தெரிவித்திருக்கின்றார்.
வெளிநாட்டுச் சக்திகளின் இந்த சதி முயற்சிகளின் பின்னணியில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவும் இணைந்து செயற்படுவதாகவும் அவர் மேலும் குற்றஞ்சாட்டியிருக்கின்றார்.:06




