செய்திகள்

புலமை பரிசில் பரீட்சை பெறுபேறு ஒக்டோபரில்

இன்று நடைபெற்ற 5ஆம் தரப் புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை எதிர்வரும் ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு முன்னர் வெளியிட நடவடிக்கையெடுக்கப்படுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் 29ஆம் திகதி முதல் விடைத்தாள் திருத்தும் பணிகளை ஆரம்பித்து எதிர்வரும் 3ஆம் திகதியளவில் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் இதன்படி ஒக்டோபர் 15ஆம் திகதிக்கு முன்னர் பெறுபேற்றை வெளியிட முடியுமெனவும் பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இன்று நடைபெற்ற இந்தப் பரீட்சையில் நாடுபூராகவும் 350,701 பேர் தோற்றியிருந்தனர்.   – (3)