புலம்பெயர்ந்த தமிழர் அமைப்புக்களுடன் அரசு பேசியதில் எந்தத் தவறும் இல்லை: மகிந்த சமரவீர
தமிழ் டயஸ் போராக்களுடன் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர பேச்சு நடத்தியதில் எந்த தவறும் கிடையாது. டயஸ்போராக்களுடன் இணக்கப்பாடு ஏற்படுத்த வேண்டும் என அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் டயஸ்போராக்களுக்கும் வெளிவிவகார அமைச்சருக்குமிடையில் நடைபெற்ற சந்திப்பு குறித்து வினவப்பட்டது.
டயஸ் போராக்களுக்கு அரச செலவில் வசதிகள் வழங்கப்பட்டதாகவும் இரகசியமாக பேச்சு நடைபெற்றதாகவும் குற்றஞ் சாட்டப்படுவது குறித்து வினவப்பட்டது.
இதற்குப் பதிலளித்த அமைச்சர், மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்திலும் தமிழ் டயஸ்போராக்களுடன் பேச்சு நடத்தப்பட்டது. சிறந்த வெளிவிவகார அமைச்சராக மங்கள சமரவீர செயற்பட்டு வருகிறார். அவர் டயஸ்போராக்களை சந்தித்து பேச்சு நடத்தியதில் தவறு எதுவும் இல்லை. அவர்கள் பிரிவினைவாத கோரிக்கையுடையவர்களாக இருந்தால் அவர்களை எமது பக்கம் திருப்ப வேண்டும்.
அதற்கு பேச்சு நடத்துவது பொறுத்தமானதே என்றார். இது தொடர்பாக கருத்து வெளியிட்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, டயஸ்போராக்கள் பிரிவினைவாத நோக்குடையவர்கள் என ஒதுக்கிவிட முடியாது. பிரச்சினைகளுக்கு தீர்வுகாண பேச்சு நடத்த வேண்டும் என்றார்.
அமைச்சர் மங்கள சமரவீர டயஸ்போராக்களுடன் திருட்டுத்தனமாக பேச்சு நடத்தியதாகவும் அவர்களுக்கான முழுச் செலவும் அரசாங்கத்தினால் வழங்கப்பட்டதாகவும் ஒன்றிணைந்த எதிரணி குற்றுஞ்சாட்டியிருந்தது.
-06




