செய்திகள்

புலம்பெயர்ந்த மக்களுக்கு இலங்கைப் பிரஜாவுரிமை: பாராளுமன்றில் பிரதமர் ரணில் உறுதி

இந்­தி­யாவில் உள்ள அக­திகள் உட்­பட வெளி­நா­டு­களில் உள்ள இலங்­கை­யர்கள் அனை­வ­ருக்கும் பிர­ஜா­வு­ரிமை வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க சபையில் தெரி­வித்தார்.

வெளி­நா­டு­களில் பிர­ஜா­வு­ரிமை பெற்­றுள்ள இலங்­கை­யர்­க­ளுக்கு இரட்டை பிர­ஜா­வு­ரிமை வழங்­கு­வ­தற்கும் நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பிர­தமர் சபையில் சுட்­டிக்­காட்­டினார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று புதன்­கிழமை பிர­த­ம­ரி­டத்­தி­லான கேள்வி நேரத்­தின்­போது ஈழ மக்கள் ஜன­நா­யக கட்­சியின் செய­லாளர் நாய­ கமும் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான கே.என். டக்ளஸ் தேவா­னந்தா எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.

டக்ள­ஸ் தேவா­நந்தா அந்தக் கேள்­வியில், 1983 ஆம் ஆண்டு முதல் 2013 ஆம் ஆண்டு வரை­யி­லான காலப் பகு­தியில் கல­வ­ரங்கள், யுத்தம் உள்­ளிட்ட பல கார­ணங்­களால் இலங்­கை­யி­லி­ருந்து பலர் வெளி­நா­டு­க­ளுக்கு அக­தி­க­ளாகச் சென்­றுள்­ளனர். விசே­ட­மாக இந்­தி­யா­விற்கு 3 இலட்­சத்து 4 ஆயி­ரத்து 289 பேர் இடம்­பெ­யர்ந்து சென்­றுள்­ள­துடன் அதில் 2 இலட்­சத்து 4 ஆயி­ரத்து 269 பேர் மீண்டும் நாட்­டுக்கு திரும்­பி­யுள்­ளனர்.

தமிழ்­நாட்டில் தற்­போது சுமார் 66 பேர் முகாம்­களில் தங்­கி­யி­ருப்­ப­தோடு 34,000 பேர் வரை­யி­லா­ன­வர்கள் முகாம்­க­ளுக்கு வெளியில் தங்­கி­யி­ருக்­கின்­றார்கள். அவர்கள் படிப்­ப­டி­யாக நாட்­டுக்குள் திரும்பிக் கொண்­டி­ருப்­ப­தாக கூறப்­ப­டு­கின்­றது. எனினும் அவர்­களின் மீள் குடி­யேற்றம், ஆட்­ப­தி­வுகள் போன்ற விட­யங்­களில் பல பிரச்­சி­னை­க­ளுக்கு முகங்­கொ­டுக்­கின்­றனர்.

அதே நேரம் தமிழ்­நாட்டில் அக­தி­க­ளா­க­வுள்ள மக்­களின் குடும்பத் தலைவர் ஒரு­வ­ருக்கு ஆயிரம் ரூபாவும் ஏனைய உறுப்­பி­ன­ருக்கு 750 ரூபாவும் இரண்டு வய­துக்கும் குறைந்த குழந்­கை­ளுக்கு 400 ரூபா வீதமும் வழங்­கப்­ப­டு­கின்­றது. இந்த கொடுப்­ப­னவு அந்த மக்­க­ளுக்கு போதா­மை­யினால் கூலி வேலைக்குச் செல்­கின்ற நிலைமை காணப்­ப­டு­கின்­றது. ஆகவே குறித்த மக்­களை பதிவு செய்­வ­தற்­காக விசேட ஏற்­பா­டு­களை மேற்­கொள்­வது குறித்து கவனம் செலுத்த வேண்­டு­மென கோரி­ய­தோடு அது தொடர்­பாக நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­டு­கின்­ற­னவா என வின­வினார்.

பிர­தமர் மேலும் தெரி­விக்­கையில்;

1983 ஆம் ஆண்­டிற்கு பின்னர் இலங்­கை­யி­லி­ருந்து அக­தி­க­ளாக இடம்­பெ­யர்ந்து இந்­தியா உட்­பட வெளி­நா­டு­க­ளுக்குச் சென்­ற­வர்­களை மீண்டும் நாட்­டிற்கு அழைத்து வந்து குடி­யேற்­று­வதே அர­சாங்­கத்தின் கொள்­கை­யா­க­வுள்­ளது. அவர்­க­ளுக்­கான பிர­ஜா­வு­ரி­மையை வழங்­கு­வ­தற்­கு­ரிய நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வுள்­ளன. இடம்­பெ­யர்ந்­த­வர்­களில் சிலர் வேறு நாடு­களில் பிர­ஜா­வு­ரி­மையை பெற்­றுள்­ளனர். இவர்கள் இலங்கை பிர­ஜா­வு­ரி­மையைக் கோரு­கின்­றனர். அவ்­வா­றா­ன­வர்­க­ளுக்கு இரட்டை பிர­ஜா­வு­ரி­மையைக் கோரும் சிங்­கள, தமிழ், முஸ்லிம் உள்­ளிட்ட அனைத்து மக்­க­ளுக்கும் அதனை வழங்­கு­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

இந்­தி­யாவில் உள்ள அக­தி­களும் இதற்குள் உள்­வாங்­கப்­ப­டு­வார்கள். இந்­தி­யா­வி­லுள்ள அக­திகள் பற்றி நான் தக­வல்­களைக் கோரி­யி­ருந்தேன். அது தொடர்­பாக சென்­னையில் உள்ள இலங்கை பிரதி உயர்ஸ்­தா­னி­க­ரா­லயம் நட­வ­டிக்­கை­களை எடுத்­துள்­ளது.

இது­வரை காலமும் 22 வய­துக்கும் மேற்­பட்­ட­வர்­களை பதிவு செய்­வ­தற்கு முறைமை இருந்தது. தற்போது 22 வயதுக்கு குறைந்தவர்களையும் பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதேநேரம் நாடு திரும்புவதற்கு தயாராகவுள்ள அகதிகளுக்கு குடிவரவு, குடியகல்வு திணைக்களத்தின் ஊடாக இரண்டு முதல் நான்கு வாரங்களுக்குள் கடவுச்சீட்டைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென உள்நாட்டு மற்றும் அலுவல்கள் அமைச்சருக்கு பணிப்புரை விடுக்கின்றேன் என்றார்.
R-06