செய்திகள்

புலம்பெயர் தமிழர்களே அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்படாமைக்கு காரணம் – கருனாவின் மனைவி

புலம்பெயர்ந்துள்ள சிலர், பணம் உழைப்பதற்காகவும் சுகபோகங்களை அனுபவிப்பதற்காகவும் போராளிகளை பயன்படுத்தி வருகின்றனர்.இத்தகைய விடயங்களை அரசாங்கம் உணர வேண்டும். மேலும் பல தமிழ் அரசியல் கைதிகள், விடுதலை செய்யப்படாமல் இருப்பதற்கு புலம்பெயர் தமிழர்களின் செயற்பாடுகளே காரணம் என மட்டக்களப்பு மாவட்ட தலைமை வேட்பாளரும் முன்னாள் போராளியுமான வித்தியாபதி முரளிதரன் தெரிவித்துள்ளார்.மட்டக்களப்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.(15)