புலம்பெயர் தமிழ் அமைப்புடன் நிஷா பிஸ்வால் பேச்சுவார்த்தை
அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிசா பிஸ்வால், தமிழ் புலம்பெயர் சமூகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் நல்லிணக்க முனைப்புக்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.
மனித உரிமை விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் டொம் மலினோவ்ஸ்கீயும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. குளோபல் தமிழ் போராம் அமைப்புடன் இந்தப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது.

நல்லிணக்கம் மற்றும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பில் ஆக்கபூர்வமான சந்திப்பு ஒன்றை புலம்பெயர் சமூகத்துடன் நடத்தக் கிட்டியதாக பிஸ்வால் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
-06




