”புல்பேஸ் ஹெல்ட்மட்” விவகாரம் தெளிவு படுத்தும் பொலிஸார்
மோட்டார் சைக்கிள்களில் பயணிப்போருக்கான தலைக்கவசம் தொடர்பாக அண்மையில் வெளியிடப்பட்ட வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் இன்னும் செயற்படுத்தப்படவில்லையென பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே முகத்தை மூடிய தலைக்கவசத்தை தடை செய்வதற்கான தீர்மானத்தின் மீது நீதிமன்றத்தினால் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியான தலைக்கவச சட்டம் தொடர்பான வர்த்தமானியில் முகத்தை மறைத்த தலைக்கவச பாவனை தொடர்பாக 10 விடயங்களை உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. -(3)




