செய்திகள்

புளியங்குளம் விபத்தில் படுகாயமடைந்த தாய் சாவு!

வவுனியா, பனிக்கங்குளம் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஓட்டோவும் பிக்கப் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்த மூவரில் ஒருவர் சிகிச்சை பயனின்றி நேற்றிரவு உயிரிழந்தார்.

இந்த விபத்தில் ஓட்டோவில் பயணித்த ஒன்றரை வயது சிறுவன் உயிரிழந்தான். அவனது தாய், தந்தை, சகோதரியான சிறுமி ஆகியோர் படுகாயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டிருந்தனர். வவுனியா, கூமாங்குழத்தைச் சோந்த சேர்ந்த சிவகுமார் தவமலர் (வயது 30) என்பவரே இவ்வாறு உயிரிழந்தார்.