பெண்ணான நான் தைரியமாக என் மீது திணிக்கப்படும் சவால்களை உடைத்தெறிகிறேன்-பறை இசைக் கலைஞர் ந. விஜயலட்சுமி
“நான் பறை இசைக்கருவியை வாசிக்க இறங்கியதும் என்னைச் சுற்றி என் உறவுகள் தடைவேலியை நிர்மாணித்தனர். அத் தடைவேலியை துணிந்து தகர்த்தெறிந்தேன்.இவ் வேலியை தகர்த்தெறிந்தும் என்னை நோக்கி என் உறவுகள் பல இடையூறுகளை விளைவித்தனர். அவர்கள் விதைத்த விதைகள் எனக்குள் முளைக்கவில்லை. அதற்கு காரணம் நான் பெரும் ஈர நிலமண்.
நான் பெரும் கருங்கல்பாறை. இப் பாறையின் மீது பெரும் ஆட்சேபனை என்னும் வெடிமருந்தை வைத்து தகர்க்கப் பார்த்தனர். அதிலும் என் உறவுக்கூட்டத்தினர் தோல்வியைத் தழுவினர்.
இவ்வாறே என் உடம்பு முழுவதும் இரத்தம் வடிய மனக்காயங்களை ஏற்படுத்தினர். என் முழு உடம்பும் அவமானங்கள், இன்னல்கள், அவர்களின் நக்கல் வார்த்தைகளால் வலி எடுக்கவில்லை. இதற்கான காரணம் இவ்வாறான சமூக காயங்களின் வலியை ஏற்றுக் கொள்ளும் ஏரியாவை என் உடம்பு கொண்டிருக்கவில்லை என்கிறார் 21 வயதான விஜயலட்சுமி.
“முதன்முதலாக என் தோட்பட்டையில் பறை தொங்குவதை என் பெற்றோர்கள் கண்டு பயந்து முகம் சுழித்தனர். ஏதோ டைம் வெடிகுண்டை இடுப்பில் கட்டிக்கொண்ட தற்கொலைக் குண்டுதாரியாக என்னைப் பார்த்தனர்.
என் அம்மா ஒப்பாரி வைத்தே கத்தி அழுதுவிட்டார். எங்கள் பிரதேசத்தின் அக்கம் பக்கத்து உறவுகளும் அம்மா வின் ஒப்பாரி சத்தம் கேட்டு வீட்டுக்குள் கூடி விட்டனர். கூட்டமாய் கூடிய சனங்கள் என்னை வாய்க்கு வந்த வகையில் நெருப்பாய் திட்டத் தொடங்கினர்.
முதன்முதலாக என் கைகள் பறையை தொட்டதும் எனக்குள் ஏதோ ஒருவித உணர்வு புலப்பட்டது. அதை வார்த் தைகளால் விபரிக்கவியலாது.அது ஓ உணர்வின், உடல் எழுச்சியின் அடையாளமாகும் என்கிறார் சென்னை மேட்டுக் குப்பத்தைச் சேர்ந்த தமிழ்நாடு புத்தர் கலைக் குழுவின் பிரதான பறை இசைக் கலைஞர் ந. விஜயலட்சுமி.
நான் பெரும் கருங்கல்பாறை. இப் பாறையின் மீது பெரும் ஆட்சேபனை என்னும் வெடிமருந்தை வைத்து தகர்க்கப் பார்த்தனர். அதிலும் என் உறவுக்கூட்டத்தினர் தோல்வியைத் தழுவினர்.
இவ்வாறே என் உடம்பு முழுவதும் இரத்தம் வடிய மனக்காயங்களை ஏற்படுத்தினர். என் முழு உடம்பும் அவமானங்கள், இன்னல்கள், அவர்களின் நக்கல் வார்த்தைகளால் வலி எடுக்கவில்லை. இதற்கான காரணம் இவ்வாறான சமூக காயங்களின் வலியை ஏற்றுக் கொள்ளும் ஏரியாவை என் உடம்பு கொண்டிருக்கவில்லை என்கிறார் 21 வயதான விஜயலட்சுமி.
“முதன்முதலாக என் தோட்பட்டையில் பறை தொங்குவதை என் பெற்றோர்கள் கண்டு பயந்து முகம் சுழித்தனர். ஏதோ டைம் வெடிகுண்டை இடுப்பில் கட்டிக்கொண்ட தற்கொலைக் குண்டுதாரியாக என்னைப் பார்த்தனர்.
உண்மையில் பறை சாதிக் கருவியல்ல. புராதன காலத்து தமிழர் முதன் முதலாக கண்டுபிடித்த தகவல் சாதனமே பறையாகும்.பறை என்பது சொல் (அறிவித்தல்) என்றே பொருள்படும். இது பலருக்கு தெரியாத விடயமாகும். எப்படி பறையை இழிவாக கருதலாம். செம் மொழியாம் தமிழ் பேசும் தமிழ் இனத்தின் பெரும் சொத்தே பறையாகும்.
என் பூட்டன் கண்டுபிடித்த பறையை என் கைகளால் வாசிப்பது என்ன தவறு? இன்னும் எமது சமூகம் மூட நம்பிக்கையில் தான் வாழ்கிறது” என சமூகத்தின் மீது குற்ற விரலை நீட்டுகிறார் விஜயலட்சுமி எவ்வித அச்சமும் இல்லாது.
“பெண்ணான நான் தைரியம் மூலமாக என் மீது திணிக்கப்படும் சவால்களை தைரியத்துடன் உடைத்தெறிகிறேன். இவ்வுலகத்தில் எப்போதுமே வேதனைக்கு உள்ளாகிறவர்கள் பெண்கள்தான். அறிவுள்ள பெண்கள் வெடித்து சிதறும் வானத்தைப் போன்றவர்கள்.
இப்போது என்னை பலரும் சபாஷ் கெட்டிக் காரி என சொல்லிப் பாராட்டுவார்கள். அப் பாராட்டுக்கு மத்தியில் பெரும் சவால்களும் வருகின்றன. இந்த சவால்களைக் கண்டு துவண்டு போய் வீட்டின் ஒரு மூலைக்குள் உட்கார்ந்து தனிமைப்படும் கோழைப் பெண்ணல்ல நான். சவால் விடுகிறார். விஜயலட்சுமி பயத்தை தொலைத்து.
நான் பி.கொம் வரை கல்வி கற்றுள்ளேன். வலைப்பந்தாட்ட வீராங்கனை. இப்போது வலைபந்தாட்டப் பயிற்றுநராக உள்ளேன்.வலைப்பந்தாட்டத்தல் ஈடுபாடு கொண்டுள்ளதை அங்கீகரிக்கும் என் உறவுகள் பறை வாசிப்பதில் முரண்படுவதை எவ்வாறு சொல்வது என்பது எனக்குத் தெரியாதுள்ளது என விஜயலட்சமி உஷ்ணமாக தெரிவிக்கிறார்.
புத்தர் கலைக் குழுவின் தலைவரும் பிரபல பறை இசைக் கலைஞருமான ஆ.மணிமாறன் (இவர் கும்கி திரைப்பட சொய்ங்…. சொய்ங்….. பாடல் புகழ் பாடகி மகிழினியின் கணவர்) தலைமையில் 2015 இல் மூன்று நாட்கள் வேடந்தாங்கலில் இடம்பெற்ற பறை இசை பயிற்சி முகாமில் பயிற்சி பெற்றேன்.
அன்றைய தினம் முதல் நான் சந்திக்கும் மனிதர்களை விட சந்தித்த எதிர் அலைகள் தான் அதிகம் என்பேன்.பறை தமிழ் இனத்தின் விடுதலைக்கான மொழி என்பது என் பெற்றோர் உள்ளிட்ட பலருக்குத் தெரியாதுள்ளது. எனது பெற்றோர் ஒரு சாதி சமூகக் கட்டுப்பாட்டுக்குள் வாழும் குடும்பம்.
அச் சமூகக் கட்டுப்பாடே என்னை பறையை தொடவேண்டாம் என குரல் எழுப்புகிறது. இங்கு சாதியம் பேசுகிறது.உலகின் அனைத்து இசைக் கருவிகளினதும் தாயே பறை. பறையிலிருந்து சிந்தும் ஒலி அனைவரையும் மெய் சிலிர்க்க வைக்கும். இந்த சக்தி எந்தவொரு இசைக்கருவிக்கும் இல்லை. உடலிலுள்ள அனைத்து நரம்புகளும் பறையின் ஒலிக்கு அடிமையாகி விடும்.
இந்தக் கருவியை தமிழ் இனம் சாதிக்கருவியாக்கிவிட்டதே என்பதுதான் எனக்குள் வாழும் பெரும் கவலையாகும்.சேர, சோழ, பாண்டிய, நாயக்க மன்னர்களின் பிரதான ஊடகமே பறையாகும். இம் மன்னர்கள் மக்களுக்கு சொல் லும் செய்தியை பறை வாசித்து மக்களுக்கு மன்னரின் செய்தியை வழங்கிய ஊடகத்துறையினரே பறைக் கலைஞர்களாவர்.இதன் காரணமாகவே மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் மன்னர்களின் மாளிகைக்குள் இவர்கள் வசித்தனர்.
இதை சங்க காலத்து இலக்கியம் தொட்டு பௌத்த காப்பியங்களான மணிமேகலை, குண்டலகேசி, சீவக சிந்தாமணி உள்ளிட்ட பல நூல்களில் பறை பற்றிய சிறப்புகள் தெரிவிக்கப்படுகின்றன என தகவல்களை கக்குகிறார் விஜயலட்சுமி.
அன்று எம் மக்கள் மத்தியில் பெரியார், எம்.ஆர்.ராதா போன்றவர்கள் பகுத்தறிவை விதைத்தனர். இவர்களின் பெரும் கருத்துகள் மக்கள் மத்தியில் பரவின. இன்று இவர்களைப் போன்ற பகுத்தறிவு சிந்தனையாளர்கள் மக்கள் மத்தியில் தோன்ற வேண்டும். மூட நம்பிக்கைகள் ஒழிய வேண்டும்.இன்று சாதியம் தமிழ் மக்கள் மத்தியல் பலமாக வேர் ஊன்றி விட்டது. அத் தாக்கத்தின் விளைவாக பறையை தொடுவதற்கும் பலரும் பயப்படுகின்றனர், கூச்சப்படுகின்றனர்.
ஆடுகள் மத்தியில்கூட மனிதர்கள் சாதியை ஏற்படுத்தியுள்ளனர். வெள்ளாடு, இரு குட்டி ஈனும், செம்மறி ஆடு, ஒரு குட்டி ஈனும் என சாதியால் ஆட்டையும் பிரித்துள்ளனர்.இயற்கையே கடவுள் என்ற நம்பிக்கையில் வாழ்பவள். சாதி, மதம், கடவுள் என பிரித்துப் பார்த்தால் எலிஸபெத் மகாராணியாலும் கூட அடுத்தவர் தயவின்றி அரைவிநாடி வாழ இயலாது.இதை உணர்ந்துதான் நான் வாழ்கிறேன். இது எனது சொந்தக் கருத்தாகும். மூட நம்பிக்கைக்குள் வாழ்பவள் அல்ல நான்.
எனக்கு நியாயம் எனத் தெரிவதை கூச்சப்படாமல், சாஸ்திரம், சம்பிரதாயம் பாராமல் வெளியே துணிவுடன் தெரிவிக்கிறேன். அநியாயத்திற்கு பயந்து ஒளிவதுமில்லை.ஆதிக்க வெறியர்கள் எங்களைப் போன்ற பறை கலைஞர்களை ஒதுக்கி வைப்பதன் மூலமாக எழும் மனக்காயங்களின் வலி எங்களுக்கு மட்டுமே தெரியும். இந்த ஆதிக்க வெறியர்களின் அடக்கு முறைக்கு நான் அடிமையாக முடியாது.
ஆதிக்க வெறியர்களின் அடக்குமுறை உக்கிரத்தால் எனக்குள் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கும் பறை வாசிப்பு ஆர்வத்தை கொல்ல முடியாது. என்றுமே பறை என் கைகளுக்குள் கபடி ஆடும். பறை என் உயிர்.பறையை வாசிக்கும்போது எனது உடலில் உள்ள ஒவ்வொரு நரம்பும் எழும்பித்துள்ளும். சுண்டுக் கம்பாலும், அடிக் கம்பாலும் பறையை வாசிக்கும்போது அதிரும் உணர்வை பறையைத் தொடும்போதே உணரமுடியும். வானத்தையே அதட்டும் சக்தியைக் கொண்டது பறை ஒலி.
இந்த பெரும் சக்தியைக் கொண்ட பறையை அண்மையில் எனது அப்பா திடீரென எடுத்து வாசித்தார். அன்று என் வாழ்நாளில் பெரிய மகிழ்ச்சியான திருப்புமுனை நாளாகும்.பல மாதங்களாக பறை வாசிப்பினால் வைராக்கியமாக என்னோடு பேசாதிருந்த என் அப்பா அன்று தான் என்னோடு பேசினார். இது பறையின் வலிமையாகும்.
விஜய், நியூஸ் 7, புதியதலைமுறை, கலைஞர் தொலைக்காட்சி நிகழ்வுகளில் என் பறை முழுக்க நிகழ்ச்சிகள் இடம்பெற்றுள்ளது.அண்மையில் விஜய் தொலைக்காட்சியின் நீயா நானா நிகழ்ச்சியில் எமது புத்தர் கலைக்குழு கலந்து பலரையும் அதிரவைத்தது. நானும் கலந்து கொண்டேன்.
இந் நிகழ்ச்சியைப் பார்த்து பலரும் பாராட்டுவார்கள். பாராட்டுபவர்களில் சிலர் நான் இருக்கும் இடத்தை விட்டு நகர்ந்ததும் ஏளனமாக என்னை விமர்சனம் செய்வார்கள். இதுதான் உலகம். கொட்டுகிறார் வார்த்தைகளை பஞ்சுமிட்டாய் போன்று விஜயலட்சுமி.
எனது அத்தை மகனை பெற்றோர் எனக்குத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். நானும் அவரும் அத்தை மகன், மாமன் மகள் என்ற இரத்த உறவுக்கு அப்பால் சின்னஞ்சிறு வயது முதல் நல்ல நண்பர்களாகவே பழகி வந்தோம்.இவ்வளவு இருந்தும் திருமண பேச்சின் அடித்தளப் பேச்சின்போது பறை இசைக்கருவி தடைக்கல்லாக விழுந்து விட்டது.
பறை வாசிப்பை நிறுத்த வேண்டும் என நிபந்தனை விதித்தனர் என் அத்தை வீட்டார். என்னால் இந்த நிபந்தனை க்குத் தலை சாய்க்க இயலாது போனது. திருமண பேச்சும் முறிந்தது.எனது பறைவாசிப்புக்கு எவர் அங்கீகாரம் வழங்குகின்றாரோ அவருக்கே நான் மனைவியாக வாழ்வேன். இது எனது சத்தியமான செய்தி. மனித இனத்தின் சாதி ஆதிக்க வெறிக்கு எனது பறையை பலிக்கடாவாக்க நான் தயார் இல்லை.
உலகில் முதன்மையான மற்றும் மிகச்சிறந்த சமூக சீர்த்திருத்தவாதி கௌதம புத்தர். அவரோடுதான் இவ் உலகின் சமூக சீர்த்திருத்த வரலாறு ஆரம்பமாகிறது.சாதிதான் சமூகம் என்றால் வீசும் காற்றில் விசம் பரவட்டும் என்றார் அம்பேத்கர். அதனால் தான் நானும் புத்தரின் பெயரில் இயங்கும் புத்தர் கலைக்குழுவில் இணைந்தேன்.
யுகம் யுகமாக பறை வாசிப்பவர்களை காலில் மிதித்து நசுக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சமூகம் என தெரிவித்து வஞ்சிக்கப்படுகையில் வளர்ந்து வரும் என்னைப்போன்ற பறை கலைஞர்களின் சுயமரியாதையை இழக்க நாம் தயாராக இல்லை.எங்களின் சுயமரியாதையைப் பாதுகாத்துக்கொள்ள போராட வேண்டியுள்ளது. ஆதி காலத்தில் பறை ஒலித்தால் பொங்கிவரும் காற்றை அடைத்தோம் போர்ப்பறை காதில் விழுந்ததும் வீரர் கூட்டம் அணி திரண்டது.
எதிரிகளை மிரட்டி விரட்டியது. உழவர் பறை ஒலித்தது. உழவர் சமூகம் உழைக்க பூமி செழித்தது. காடு, கழனி யெங்கும் உழைக்கும் உழைப்பாளிகளின் வர்க்கம் சோர்ந்து போகாமலிருக்க அன்று இந்தப்பறை மொழிதான் உற்சாகம் வழங்கியது.விதைக்க, அறுவடை செய்ய, போர் வெற்றியை அறிவிக்க, பிறப்பு, இறப்பு, வெற்றி, தோல்வி மற்றும் கூத்து களுக்கு இறை வழிபாடு என அனைத்துக்குமே பறையை பயன்படுத்தினோம்.
அன்று எந் தெந்த மூலைகளில் தமிழன் வாழ்ந்தானோ அங்கெல்லாம் பறை ஒலித்தது. மீண்டும் அந்தப் பறை உலகம் முழுவதும் பரவி வாழும் தமிழர்கள் மத்தியில் ஒலிக்க வேண்டும் என்பதே எனது கனவு.இதற்காக தியாகத்துடன் கடுமையாக உழைப்பேன் என்கிறார் பறை இசைக் கலைஞரான வீர மங்கை விஜயலட்சுமி.(15)




