செய்திகள்

பெண்களின் பின்பகுதியை பிளேட்டால் பதம்பார்க்கும் காமுகன் மஹரகமவில் கைது

மஹரகம பகுதியில் கர்ப்பிணி பெண்ணொருவரின் பின்பக்கத்தில் பிளேட் தகட்டால் வெட்டிய காமுகனொருவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறாக வெட்டுக்காயங்களுக்கு இலக்கான கர்ப்பிணி பெண் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் அவருக்கு 8 தையல்கள் போடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் இதற்கு முன்னர் மஹரகம பகுதியில் சட்ட பீட மாணவியொருவர் மற்றும் அறிவிப்பாளர் ஒருவரின் பின்பக்கத்தை கூரிய ஆயுதத்தால் குத்தி காயமேற்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் அந்த சம்பவங்களுக்கு இந்த சந்தேக நபருக்கும் தொடர்பு இருப்பதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)