செய்திகள்

பெண்களை டுபாய், ஓமானுக்கு கடத்தும் பிரதான சந்தேக நபர் கைது!

வெளிநாட்டு வேலைவாய்ப்பு போர்வையில் சுற்றுலா வீசாவில் பெண்களை அழைத்துச் சென்று அவர்களை ஏமாற்றி டுபாய் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளில் விற்றுவந்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைதாகியுள்ளார்.

குறித்த சந்கேதநபர் இன்று காலை இலங்கை திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

44 வயதுடைய குறித்த சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை இது தொடர்பான சம்பவங்கள் விசாரணைகள் நடைபெற்று வருவதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

-(3)