பெண்கள் கையில் இந்த வார சினிமா?
கோலிவுட்டில் வாரம் தோறும் பல படங்கள் களம் இறங்குகிறது. இதில் இந்த வார வெள்ளிக்கிழமை மிகவும் ஸ்பெஷல், ஏனெனில் இந்த வாரம் வெளிவரும் இரண்டு படங்களின் இயக்குனர்கள் பெண்கள் தான்.
தனுஷ் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் அம்மா கணக்கு படம் அஸ்வினி ஐயர் என்பவரால் இயக்கப்பட்டுள்ளது, அதேபோல் கலையரசன் நடிக்கும் ராஜா மந்திரி படத்தை உஷா கிருஷ்ணன் இயக்கியுள்ளார்.
இந்த இரண்டு படங்களும் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பை உண்டாக்கியுள்ளது, சமீபத்தில் பல பெண் இயக்குனர்கள் தங்கள் திறமையை நிரூபிக்கும் பொருட்டு இவர்களும் வெற்றிபெற வேண்டும் என சினி உலகம் சார்பாக வாழ்த்துக்கள்.
N5




