செய்திகள்
பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும் துஸ்பிரயோகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம்
வவுனியாவில் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மாணவியினுடைய கொலையைக் கண்டித்து கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் கண்டனப்பேரணி ஒன்றை நடத்தி ஐனாதிபதிக்கான மகஜர் ஒன்றினையும் மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்களிடம் கையளித்துள்ளனர்.
வவுனியாவில் பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட பாடசாலை மாணவியின் படுகொலையைக் கண்டித்து கிளிநொச்சி சந்தை வர்த்தகர்கள் இன்று காலை 9.30 மணிக்கு சந்தை வளாகத்திலிருந்து ஏ-9 வீதியுடாக கண்டனக் கோசங்களை எழுப்பியவாறு கிளிநொச்சி மாவட்டச் செயலகங்களிற்குச் சென்று இலங்கை ஐனாதிபதிக்கான மகஐர் ஒன்றினை மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாகம் அவர்களிடம் வழங்கி வைத்தனர். இதனை ஏற்றுக்கொண்ட மாவட்ட அரசாங்க அதிவர் அவர்கள் உரிய வகையில் இந்த மகஐரை அனுப்பி வைப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரதம நீதியரசர், பொலிஸ்மா அதிபர் ஆகியோருக்கும் இந்த மகஐர்களை அனுப்பி வைப்பதற்காக கையளித்து வைத்தனர்.
மகஜர் வருமாறு
பெண்கள், சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளுக்கும,; துஸ்பிரயோகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைப்போம்! 23-02-2016
இன்றைய சிறார்கள் நாளைய தலைவர்கள் என வார்த்தைகளில் மட்டும் கூறி விட்டு அவர்கள் மலர்களாக மலரும் முன்னமே மொட்டுகளிலேயே கிள்ளி எறியும் துர்ப்பாக்கிய நிலைக்கு இலங்கை வாழ் சிறுவர்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இலங்கையில் அன்மைக் காலமாக சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் இடம் பெற்று வருவதனை அன்றாடம் ஊடகங்கள் மூலம் அறிந்து கொள்கின்றோம்.
ஆனாலும் அண்மை காலங்களில் சிறுவர்கள் மீதான துஸ்பிரயோகங்கள் அதிகரித்து வருவதானது எல்லோரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது சிறுவர்களை பாடசாலைகளுக்கும், வெளியிடங்களுக்கும் அனுப்புவதற்கு பெற்றோர்களும், பாதுகாவலர்களும் அதிகம் அச்சப்படக் கூடிய சூழல் இன்று ஏற்பட்டுள்ளது.
சிறுவர்களுக்கு எதிரான கொடூர பாலியல் வன்புணர்வுகளும், அதன் பின்னரான கொலை சம்பவங்களும் அதிகம் பதிவாகிய வண்ணம் உள்ளன. இதில் மிகவும் கண்டனத்திற்கும், அனைத்து சமூகத்தினரினதும் கொந்தளிப்புக்கும் உட்பட்ட விடயமாக யாழ் மாணவி வித்தியாவின் கொலை. அதனையடுத்து கொட்டகதெனிய சிறுமி சேயா சந்தவமியும், தற்போது வவுனியா மாணவி ஹரிஸ்ணவியும் என சிறுவர்கள் பாலியல் வன்புணர்வுக்குப் பின் கொலை செய்யப்படுவது தொடர் கதையாய் தொடர்கிறது.
மேலும் திருகோணமலை சம்பூரில் ஆறு வயது சிறுவன் பாலியல் வன்புணர்வின் பின் கொலை செய்யப்பட்டு கல்லில் கட்டபட்டு கிணற்றில் போட்ட சம்பவமும், 10 வயது சிறுவன் ஒருவனை அத்துருகிரிய பகுதியில் படுகொலை செய்துள்ள சம்பவமும், பொலனறுவை மன்னம்பிட்டிய பகுதியில் 9 வயது சிறுமியை 3 பேர் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தியமை என சொல்லிக் கொண்டே போகும் அளவுக்கு நிலைமைகள் மோசமாக்கியுள்ளது.
இந்த நிலைமை இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளமை எல்லோரினதும் மத்தியில் அச்சத்தினை தோற்றுவித்துள்ளது. இன்று சிறுவர்களுக்கு எதிரான பாலியல் தொல்லை வன்புணர்வு, ஆபாச படங்களை காட்டுவது, ஏமாற்றுதல், கடத்தல், கொலை செய்தல் போன்ற கொடூரங்கள் சர்வசாதாரணமான நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
வித்தியாவின் கொலையினை அடுத்து இலங்கையில் சிறுவர்களுக்கு எதிராக இவ்வாறான ஒரு பாலியல் ரீதியான கொலை இடம் பெற கூடாது என்று முழக்கமிட்ட அரசாங்கம் மற்றும் சிவில் சமூகம் அடுத்து சேயாவின் கொலைக்கும் பத்து வயது சிறுவனின் கொலைக்கும் தற்போது ஹரிஸ்ணவியின் கொலைக்கும் என்ன பதில் கூறப்போகின்றது. இத்தகைய கொடூரமான சிறுவர்களுக்கு எதிரான துஸ்பிரயோகத்தினை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க போகின்றதா? அல்லது இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்தும் நிகழ பார்த்துக்கொண்டிருக்கப் போகிறதா?
இவ்வாறு சிறுவர்கள் மீதான கொடூர பாலியல் வன்புணர்வு மற்றும் கொடூர கொலை, துன்புறுத்தல்கள் இடம் பெற போதை பொருள் பாவனையும், ஆபாச இணையத்தளங்களும், பிரதான அம்சமாக மாறியுள்ளன. ஆனால் இவற்றை கட்டுப்படுத்துவதில் அரச செயற்பாடுகள் திருப்தி அளிப்பதாக இல்லை. இவ்விடயங்களில் அரசாங்கம் அசமந்த போக்கிலேயே செயற்படுகிறது.
நாட்டில் சிறுவர் துஸ்பிரயோகத்தினை தடுத்து நிறுத்த எத்தனையோ சட்டங்கள் கொண்டு வரப்பட்ட போதும் அச்சட்டங்கள் கடுமையானதாக இன்மையால் இவ்வாறான சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாத நிலையில் நாட்டின் சட்டமும,; பாதுகாப்பும் காணப்படுகிறது.
எனவே அன்பார்ந்த சமூகமே நாளை எம் சமூகத்தின் தலைவர்களையும், தலைவிகளையும் பாதுகாக்க இன்றே அணிதிரளுங்கள்!. சிறுவர்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை தடுக்க விழிப்படையுங்கள்! ஹரிஸ்ணவியோடு பெண்கள், சிறுவர்கள் மீதான இந்த கொடூரங்கள் முடியட்டும்.
n10
n10







