பெப்ரவரி 24 வெளியாகும் அஜித்தின் ‘வலிமை’
நடிகர் அஜித்தின் 60வது படமான ‘வலிமை’ திரைப்படம் வெளியாகும் தினம் தொடர்பான அதிகாரபூர்வமான அறிவிப்பு படக் குழுவினரால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி பெப்ரவரி 24 ஆம் திகதி வெளியாகும் என படத்தின் தயாரிப்பாளரான போனிகபூர் தெரிவித்துள்ளார்.
இந்த திரைப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக பொலிவூட் நடிகை ஹூமா குரேஷி நடிக்க, யோகிபாபு நகைச்சுவை கதாபாத்திரத்திலும், தெலுங்கு நடிகர் கார்த்திகேயா வில்லனாகவும் நடித்துள்ளனர்.
படத்தை பொங்கல் தினத்தில் வெளியிட திட்டமிடப்பட்டிருந்த போதும், கொவிட் பரவல் நிலைமையால் வெளியீட்டை ஒத்தி வைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வலிமை திரைப்படம்வரும் பெப்ரவரி 24 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
-(3)




