செய்திகள்

பெரஹராவில் யானை குழம்பியதால் பெண்ணொருவர் பலி : இரத்தினபுரியில் சம்பவம்

இரத்தினபுரி நகரில் அமைந்துள்ள சமன் தேவாலயத்தின் பெரஹராவின் போது யானையொன்று குழுப்பமடைந்ததை தொடர்ந்து அச்சத்தில் ஓடிய பெண்ணொருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.
இதேவேளை இந்த சம்பத்தின் போது 12 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நேற்று இரவு குறித்த தேவாலயத்தின் இறுதி பெரஹரா நிகழ்வு நடைபெறவிருந்த நிலையில் அதற்காக கொண்டு வரப்பட்டிருந்த யானையொன்று திடீரென குழப்பமடைந்து ஓட தொடங்கியுள்ளது. இதன்போது அங்கு வருகை தந்திருந்தவர்கள் பதற்றத்தில் பாதுகாப்பு தேடி ஓடிய போது பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். இவ்வாறாக காயமடைந்தவர்களில் 60 வயது பெண்ணொருவர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. -(3)