பெருமளவில் ஹெராயின் பறிமுதல்
இலங்கையின் தென் கடற்பரப்பில் இதுவரை இல்லாத வகையில் 100 கிலோவுக்கும் அதிகமான ஹெராயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பில் 10 இரானியர்களும் ஒரு பாகிஸ்தானியரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படை பேச்சாளர் கேப்டன் அக்ரம் அலவி உறுதிப்படுத்தினார்.
கைப்பற்றப்பட்டுள்ள ஹெராயின் சந்தையில் பல மில்லியன் டாலர்கள் பெறுமதி வாய்ந்தது எனக் கூறப்படுகிறது.
இலங்கை உளவுத்துறையின் அளித்த தகவலின் அடைப்படையில் நடுக்கடலில் இந்தப் படகைத் தடுத்து போதைப் பொருளைக் கடற்படையினர் கைப்பற்றியதாகவும் அதன் பேச்சாளர் கூறுகிறார்.
அண்மைக் காலமாக வெளிநாடுகளில் இருந்து கடத்திவரப்படும் போதைப் பொருட்கள் தொடர்ச்சியாக இலங்கையில் கைப்பற்றப்படுகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
n10




