செய்திகள்
பெரும் போக நெல்லை கொள்வனவு செய்வதற்கு அரசாங்கம் தீர்மானம்
2015/2016 பெரும்போகத்தின் போது நெல் அறுவடை செய்யும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் அந்தநெல்லை விவசாயிகளிடமிருந்து கொள்வனவு செய்வதற்கான வேலைத் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது.
நெல் கொள்வனவு செய்யும் அரசாங்கத்தின் கொள்கையின் பிரகாரம் இப்போகத்தின் போது 19 மாவட்டங்களில் நெல் கொள்வனவு செய்வதற்கு நெல் கொள்வனவு சபை திட்டமிட்டுள்ளது. அதனடிப்படையில் 2015/2016 பெரும்போகத்தின் போது நெல் கொள்வனவு செய்யும் வேலைத்திட்டத்தின் கீழ் நெல் கொள்வனவு சபையின் மூலம் விவசாயிகளின் நேரடியாக நெல்லினை கொள்வனவு செய்வதற்கும், அவ்வேலைத்திட்டம் குறித்த மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களின் உதவியுடன் செயற்படுத்துவதற்கும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இதன்படி கொள்வனவு செய்யப்படும் “கீரி சம்பா” கிலோ ஒன்றுக்கு 50 ரூபா, சம்பா வகை நெல் கிலோ ஒன்றுக்கு 41ரூபா, நாடு வகை நெல்லினங்கள் கிலோ ஒன்றுக்கு 38 ரூபா வீதம் செலுத்துவதற்கும், 2,000 கிலோ கிராம் நெல் அறுவடையை கொண்டுள்ள நபர்களிடத்திலிருந்து நெல் கொள்வனவு செய்வதற்கும் கிராமிய பொருளாதாரம் தொடர்பான அமைச்சர் கௌரவ பி.ஹெரிசன் அவர்களினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
n10




