செய்திகள்

பெல்ஜியத்தின் வரலாற்றில் மிகவும் துயரமான தருணம்

பெல்ஜியத்தில் சற்று முன்னர் இடம்பெற்றுள்ள தாக்குதல்களை அந்த நாட்டின் பிரதமர் கோழைத்தனமானவை என வர்ணித்துள்ளதுடன் பலர்கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தனது நாட்டின் வரலாற்றில் மிகவும் துயரமான தருணம் என அதனை வர்ணித்துள்ள அவர் அனைவரையும் பொறுமை காக்குமாறும், நிதானத்தையும் அமைதியையும் கடைப்பிடிக்குமாறு கேட்டுள்ளார்.ஐரோப்பிய ஒன்றிய தலைவரும் இதனை கண்டித்துள்ளார்.பெல்ஜியத்தின் ஓலிபரப்பு நிலையமான விடிஆர் விமானநிலையத்தில் 13 பலியாகியுள்ளதாகவும் 35 பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை புகையிரதநிலையத்தில் 10 ற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின்றன.விமானநிலைய குண்டுவெடிப்புகளிற்கு முன்னர் அராபியமொழியில் கோசமிட்டபடி வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின்றன.மக்கள் விமானநிலையத்திலிருந்து பதட்டத்துடன் வெளியேறும் புகைப்படங்களை ஊடகங்கள் காண்பித்துள்ளன.

விமானப்போக்குவரத்துக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டுள்ளதுடன் மக்கள் புகையிரத நிலையங்களிற்கு செல்லவேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.இதேவேளை பிரிட்டனின் விமானநிலையங்கள், புகையிரத நிலையங்கள் மற்றும் கேந்திர முக்கியத்துவம் வாயந்த இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

Brussels_Metro_tre_3598814b