செய்திகள்

பேச்சாளர் என்ற ரீதியில் சுமந்திரன் எதையும் பேசுவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம்: செல்வம் எம்.பி VIDEO

பேச்சாளர் என்ற ரீதியில் சுமந்திரன் எதையும் பேசுவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம் என பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவரும், தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் மத்திய குழுக் கூட்டம் வவுனியாவில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று மதியம் இடம்பெற்றது. அதன் பின்னர் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளரின் கேள்விக்கு பதில் அளிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

பேச்சாளர் என்ற ரீதியில் சுமந்திரன் எதையும் பேசுவதற்கு நாம் அனுமதிக்க மாட்டோம். அவர் கூறும் கருத்துக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பான கருத்துக்களாக அமைய வேண்டும். அவர் நினைத்த கருத்துக்களை தமிழ் தேசியக் கூட்டமைப்புக் கருத்துக்களாக சொல்லக் கூடாது. அதை நாங்கள் அவரிடமும் வலியுறுத்தியிருக்கிறோம். ஆனால் அவருடைய கருத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கருத்தாக வருகின்ற போது அதை நாங்கள் எல்லோரும் ஏற்றுக் கொள்கின்ற கருத்தாக தான் அமைய வேண்டும். பேச்சாளர் என்று சொல்லிக் கொண்டு தனிப்பட்ட ரீதியில் அவர் தன்னுடைய கருத்தை சொல்வது நான்றாக இருக்காது என இதன்போது தெரிவித்தார்.

N5