பொதுத் தேர்தலை சவாலுக்கு உட்படுத்திய மனு தள்ளுபடி!
பொதுத் தேர்தல் திகதிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவைத் தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை (4) உத்தரவிட்டுள்ளது.
பொதுத் தேர்தலை எதிர்வரும் 14ஆம் திகதி நடத்துவது அரசியலமைப்புக்கு முரணானது எனத் தீர்ப்பளிக்குமாறு கோரி எச்.எம். பிரியந்த ஹேரத்தினால் உயர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இந்த மனு பிரிதி பத்மன் சூரசேன, ஷிரான் குணரத்ன மற்றும் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்றைய தினம் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது.
இதன்போதே அந்த மனுவை தள்ளுபடி செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-(3)




