செய்திகள்
பொது மக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவு
புதிய அரசியலமைப்பு தொடர்பில் பொது மக்களின் கருத்துக்களை பெறும் நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடையவுள்ளன.
இதன்படி, நாளையதினம் அம்பாறை மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களிலுள்ள மக்களின் கருத்துக்கள் பெறப்படவுள்ளதாக, இது தொடர்பில் நியமிக்கப்பட்ட ஆணைக்குழுவின் தலைவர் லால் விஜேநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இம்மாத ஆரம்பம் முதல் நாடு பூராகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வந்தது.
n10




