செய்திகள்
பொன்சேகாவுக்கு எம்.பி பதவியை பெற்றுக் கொடுக்குமாறு உயர் நீதி மன்றத்தில் மனு
முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சோகாவுக்கு கிடைக்க வேண்டிய எம்.பி பதவியை அவருக்கு பெற்றுக்கொடுக்குமாறு கோரி அவரின் தனிப்பட்ட செயலாளர் சேனக ஹரிப்பிரிய அனல்ட் த சில்வாவினால் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
பொன்சேகாவுக்கு கிடைக்க வேண்டிய எம்.பி பதவி வழங்கப்படாமையினால் அவரின் உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகவும் இதற்காக அவருக்கு 10 கோடி ரூபா நட்ட ஈட்டையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமெனவும் அந்த மனுவினூடாக கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.




