செய்திகள்

பொன்சேகாவுக்கு மத்திய , வடமத்திய , ஊவா அபிவிருத்தி அமைச்சு?

தேசியப் பட்டியல் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுள்ள முன்னாள் இரணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு மத்திய , வடமத்திய மற்றும் ஊவா மாகாண அபிவிருத்தி அமைச்சு பதவி வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை அல்லது சனிக்கிழமை அவர் அந்த அமைச்சுப் பதவியை பொறுப்பேற்பார் என அரசாங்க தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஜனாதிபதியும் , பிரதமரும் இந்த அமைச்சு தொடர்பாக கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.