செய்திகள்

பொன்சேகா உட்பட நால்வருக்கு அமைச்சு பதவி? அடுத்த வாரம் பதவியேற்கும் சாத்தியம்

ஐக்கிய தேசிய கட்சியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரிற்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரிற்கும் அமைச்சு பதவிகள் வழங்கப்படவுள்ளதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

திலக் மாரப்பன காணியமைச்சராக நியமிக்கப்படுவார், முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா யுத்தவீரர்கள் நலன்புரியமைச்சராக நியமிக்கப்படுவார் என அவை தெரிவித்துள்ளன.

பதுளை மற்றும் காலியை சேர்ந்த ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரிற்கும் அமைச்சுப் பொறுப்புகள் வழங்கப்படவுள்ளதாகவும் அவை தெரிவித்துள்ளன.  வெளிநாட்டுப் பயணத்தை முடித்துக்கொண்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாடு திரும்பியவுடன் இந்த நியமனங்கள் வழங்கப்படும் எனத் தெரிகின்றது.
R-06