செய்திகள்

பொரளை மயானத்தில் பொலிஸாரை குழப்பிய டிரோன் கமரா

பொரளை மயானத்தில் புதைக்கப்பட்ட சன்டே லீடர் பத்திரிகை ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் எலும்புக் கூட்டை தோன்டியெடுக்கும் வேலையில் நேற்று அந்தப் பகுதியில் மேலாக பறந்த டிரோன் கமராவால் (வான் வழி படமெடுக்கும் கருவி) பொலிஸார் குழப்பமடைந்துள்ளனர்.
இதனை தொடர்ந்து அந்தக் கமரவை கைப்பற்றுவதற்கும் மற்றும் அதனை அனுப்பியவர்கள் யார் என்பதனை கண்டுபிடிப்பதற்கும் பொலிஸார் முயற்சித்த போதும் அது எங்கிருந்து இயக்கப்படுகின்றது என்பதனை அவர்களால் கண்டுபிடிக்க முடியாது போயுள்ளதுடன் அதனையும் மீட்க முடியாது அது காணமல் போயுள்ளது.
மயானத்திற்குள் ஊடகவியலாளர்கள் யாரையும் அனுமதிக்காத நிலையில் அவர்கள் வெளியே இருந்த நேரத்திலேயே அந்த ரிரோன் கமரா பறந்ததால் உடனடியாக ஊடகவியலாளர்கள் இருந்த பக்கம் பொலிஸார் சென்ற போதும் அது அந்தப் பகுதியிலிருந்து இயக்கப்பட்டிருக்கவில்லை. -(3)