செய்திகள்

பொருளாதார அபிவிருத்திக்கு எதிரான செயற்பாடுகளை தோற்கடிப்போம் : ரணில்

வேலை நிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டு பொருளாதார அபிவிருத்தி செயற்பாடுகளுக்கு இடையூறுகளை ஏற்படுத்துவோரின் எண்ணங்களை தோற்கடிப்போம். என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் இன்று நடைபெற்ற மாவட்ட ஐக்கிய தேசிய கட்சி செயற்பாட்டாளர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிலர் எமது பயணங்களுக்கு இடையூகளை ஏற்படுத்துகின்றனர். அவர்களை நாம் தோற்கடிப்போம். இதன்படி அவர்களுக்கு தலைதூக்க முடியாதவாறு நாம் எமது வேலைத்திட்டங்களை முன்னெடுப்போம். என அவர் அங்கு தெரிவித்துள்ளார். -(3)