செய்திகள்
பொருளாதார மத்திய நிலைய விவகாரம் : தீர்மானிக்குமாறு வவுனியா ஒருங்கிணைப்பு குழுவுக்கு ஜனாதிபதி பணிப்பு
வடக்கு பொருளதார மத்திய நிலையத்தை எங்கே அமைப்பது என்பது தொடர்பாக வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் தீர்மானமெடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி விரைவில் அந்த குழு கூடி இது தொடர்பாக தீர்மானமெடுத்து ஜனாதிபதிக்கு அறிவிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த பொருளதார மத்திய நிலையத்தை தாண்டிக்குளத்திலா அல்லது ஓமந்தையிலா அமைப்பது என்பது தொடர்பாக முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
n10




