பொலிசாருக்கும் மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்குமிடையில் உள்ள போட்டியால் போதைப் பொருள் கடத்தலை தடுப்பதில் சிக்கல்
போதைப்பொருள் வியாபாரம் சமீபகாலமாக வட மாகாணத்தில் வலுபெற்றுவருகிறது. கடந்த காலங்களில் பல கோடி ரூபாய்கள் பெறுமதி மிக்க போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டாலும் இன்றுவரை அதன் பிரதான சூத்திரதாரிகள் கைது செய்யப்படாதது தொடர்பாக சமூக ஆர்வலர்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
போதைப்பொருட்கள் தொடர்பாக பல சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்தாலும்இ அவர்கள் குறிப்பாக வாகனங்களில்; சிறிய அளவில் போதைப்பொருட்கள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்டவர்களும்இ அதேபோன்று வீடுகள் உள்ளிட்ட பல இடங்களில் இவ்வாறான போதைப்பொருட்கள் வைத்திருந்ததாக அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட சிறு வியாபாரிகளும்இ போதை பொருள் பாவணையாளர்களுமேயாவர்கள்.
ஆனால் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சக்திமிக்க போதைப்பொருள் வியாபார முதலைகள் இன்றுவரை கைது செய்யப்படாமை சமூக ஆர்வலர்களிடையே பலத்த சந்தேகத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
போதைபொருட்களை ஒழிக்க சர்வதேசம் மற்றும் தேசிய மட்டத்தில் பல்வேறு முனைப்புகள் முன்னெடுக்கப்பட்டாலும். அதனை முற்றாக தடுத்து நிறுத்துவதில் பல்வேறு சிக்கல்களும் முட்டுக்கட்டைகளும் காணப்படுகிறது. இதனை ஒழிப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுத்துவது ஒவ்வொருவருடை தார்மீக கடமையாகும் என தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள் சமூகத்தை சீரளிக்கும் இவ்வாறான விடயங்களை முற்று முழுவதுமாக தடுப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவதின் அவசியத்தை வலியுறுத்தியுள்ளனர்.
வட மாகாணத்தில் பல மாவட்டங்களில் இவ்வாறான போதைப்பொருட்கள் வியாபாரம் நடைபெற்று வந்திருந்தாலும் மன்னார் மாவட்டத்தில் போதைப் பொருள் வியாபாரம் முன்னிலை பெறுவதாகவே தெரிகிறது.
பல வருடங்களாக மன்னார் முசலி பிரதேச செயலகப்பிரிவில் பல கோடி ரூபாய்கள் பெறுமதியான போதைப்பொருட்கள் பலமுறை மீட்கப்பட்டாலும் குறித்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் செல்வாக்கு மிக்க போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் முதலைகள் இன்று வரை கைது செய்யப்படாததே இதற்கான காரணமாகும்.
சிறிய அளவில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவோரையும்இ போதைப்பொருள் பாவனையாளர்களையும் மோப்பம் பிடித்து கைது செய்யும் பொலிசார் மற்றும் மதுவரித்திணைக்கள அதிகாரிகள் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் சக்திமிக்க வியாபாரிகளை இன்று வரை அடையாளம் கண்டு கைது செய்யாமை அவர்களது கடமையில் உள்ள குறைபாடுகளை வெளிச்சமிட்டு காட்டுகின்றது.
இதன் அடிப்படையில் குறித்த சக்திமிக்க போதைப்பொருள் வியாபாரிகளுக்கும் செல்வாக்கு மிக்க அரசியல் வாதிகளுக்குமிடையில் நெருக்கமான தொடர்புகள் இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சமூகத்தை சீரழிக்கும் இவ்வாறான போதைப்பொருள் சிறு வியாபாரிகளையும்இ பாவனையாளர்களையும் சட்டத்தின் முன் நிறுத்தும் நடவடிக்கை பாராட்டத்தக்கது என்றாலும் போதைப்பொருள் விற்பனையில் சக்தி மிக்க வியாபாரிகளை சட்டத்தின் முன் நிறுத்தாது அதனை இருட்டடிப்பு செய்வதாகவே கருத தோன்றுவதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
பல கோடி பெறுமதி மிக்க போதைப்பொருட்கள் மீட்கப்பட்டாலும் அதன் பிரதான சூத்திரதாரிகளாக சக்திமிக்க போதைப்பொருள் வியாபாரிகள் இன்றுவரை கைது செய்யப்படாமையே இதற்கான காரணமாகும்
பெறுமதி மிக்க போதைப்பொருட்களை அதிரடியாக மீட்கும் பொலிசாரும் அதேபோன்று மதுவரி திணைக்கள அதிகாரிகளும் ஏன்? குறித்த பிரதான போதை வியாபாரிகளை இன்றுவரை கைது செய்யமுடியாமல்போனது என கேள்ளி எழுப்பியுள்ளனர்.
அவர்களை கைது செய்ய முடியாமைக்கு மேலும் ஒரு காரணம் இருக்கலாம் என தெரிவிக்கும் சமூக ஆர்வலர்கள் குறிப்பாக பொலிசாருக்கும் மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்குமிடையில் உள்ள போட்டி காரணமாகவும் சக்திமிக்க வியாபாரிகளை கைது செய்வதில் சிக்கல்கள் நிகழக்கூடிய வாய்ப்புகள் இருக்க வாய்ப்புண்டு.
குறிப்பாக பொலிசாரும் அதேபோன்று மதுவரி திணைக்ள அதிகாரிகளும் போதைப்பொருள் இருப்பதாக தகவல்கள் தெரிந்தால் அதனை முதலில் யார் கைபற்றி தமது தரத்தினையும்இ அதேபோன்று எதிர்காலத்தில் வரக்கூடிய பதவி உயர்வையும் குறிவைத்து செயற்படுவதால் குறித்த பிரதான சக்திமிக்க போதை வியாபாரிகளை அடையாளம் கண்டு கைது செயவதில் கோட்டை விட்டும் சந்தர்ப்பமும் காணப்படுகிறது என தோன்றுகிறது.
குறிப்பாக போதைப்பொருள் உள்ள இடம் அடையாளம் காணப்பட்டால் குறித்த போதைப்பொருட்களை விற்பனை செய்யும் முகவர்கள் குறித்த பகுதிக்கு சென்றே மறைத்து வைக்கப்பட்ட அப் பொருட்களை எடுத்து செல்லவேண்டும். ஆனால் அவர்கள் அதனை எடுக்க வருவார்கள் என்று தெரிந்திருந்தும் அதற்கு வியுகம் ஒன்றை வகுக்காமல் புலனாய்வு வழியூடாக செயற்படாமல் போட்டியின் காரணமாக இரு பிரிவினரில் யார் முந்துகிறார்களோ அவர்கள் உடனேயே அப் பொருட்களை மீட்டு செல்கின்றனர். இதனால் சக்திமிக்க வியாபாரிகளை கைது செய்வதில் தொடர்ந்து சிக்கல்கள் தொடர்கின்றன.
எனவே பொலிசாருக்கும் மதுவரி திணைக்கள அதிகாரிகளுக்குமிடையில் பொதுவான இணக்கப்பாடு ஒன்று எட்டப்படுமானால்; எவ்வாறான சக்திமிக்க அரசியல் வாதிகளின் தலையீடு இருந்தாலும் பிரதான போதைப்பொருள் வியாபாரிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது சாத்தியமே!




