செய்திகள்

பொலித்தீன் பாவனை தொடர்பாகவும் கட்டுப்பாடு வருகிறது

பொலிதீன் பாவனை மூலம் ஏற்பட்டுள்ள சுழலியல் பிரச்சினைகளை குறைப்பதற்காக பொலிதீன் பாவனையினை முறையாக முகாமைத்துவம் செய்யும் வகையில் தேசிய திட்டமொன்றை அமைக்க அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பொலிதீன் மற்றும் பிலாஸ்டிக் உற்பத்திகளை முறையற்ற முறையில் பாவித்தல், வெளியேற்றல் ஆகிய காரணங்களினால் சமூக, சூழலியல், சுகாதார மற்றும் பொருளாதார பிரச்சினைகள் ஏராளம் ஏற்படுகின்றன. இலங்கையில் ஒருவர் ஒரு நாளைக்கு 0.5 கிலோ கிராம் பொலிதீன் மற்றும் பிலாஸ்டிக் வகைகளை பாவிக்கின்றனர். வருடத்துக்கு 05 இலட்சம் டொன் பொலிதீன் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்றன.
உலகில் சில நாடுகளில் பொலிதீன் பாவனை முற்றுமுழுதாக தடைசெய்யப்பட்டுள்ளதோடு, சில நாடுகளில் தெரிவு செய்யப்பட்ட சில பொலிதீன் வகைகள் தடைசெய்யப்பட்டுள்ளன. உக்கிச் செல்வதற்கு அதிக நாட்கள் எடுக்கும் பிலாஸ்டிக் மற்றும் பொலிதீன் வகை உற்பத்திகள் சூழலுக்கு சேர்வதன் மூலம் ஏற்படும் சூழலியல் பிரச்சினைகளை கட்டுப்படுத்துவதன் தேவை மற்றும் பிலாஸ்டிக் மற்றும் பொலிதீன் ஆகியவற்றுடன் இணைந்த தொழிற்றுறைகளில் அதிகமானவர்கள் பணிபுரிதல் ஆகிய காரணங்களை கருத்திற் கொண்டு இலங்கையினுள் பொலிதீன், பிலாஸ்டிக் மற்றும் உக்காத பிலாஸ்டிக் பாவனை தொடர்பில் தேசிய கொள்கை மற்றும் செயற்றிறன் மிக்க திட்டம் ஒன்றை தயாரிப்பதற்காக விசேட குழுவொன்றை நியமிப்பதற்கு மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. -(3)