செய்திகள்

பொலிஸாரினால் நெல்லியடியில் இந்தியப் பிரஜை கைது

சட்டவிரோதமாக நெல்லியடி பகுதியில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட இந்தியப் பிரஜை ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
குறித்த இந்தியப் பிரஜை சுற்றுலா விசாவில் இலங்கை வந்து துணி விற்பனையில் ஈடுபட்டதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
31 வயதுடைய குறித்த சந்தேகநபர்; நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதி விசாரணைகளை நெல்லியடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் எனத் தெரியவருகிறது.