பொலிஸ் அதிகாரத்தை நீக்க 22ஆவது அரசியலமைப்பு திருத்தம்!
13ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மாகாணங்களுக்கான பொலிஸ் அதிகாரத்தை நீக்க புதிய அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வர நடவடிக்கை எடுக்கவுள்ளதாக முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
22ஆவது அரசியலமைப்பு திருத்தமாக அதனை கொண்டு வரவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமிழ் மக்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலேயே ஜனாதிபதி 13 ஆவது திருத்தம் பற்றி கதைக்கின்றார் என்றும், இது வெறும் ஏமாற்று கதைகளே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தாம் புதிய திருத்தத்தை கொண்டு வந்து பொலிஸ் அதிகாரத்தை நீக்க நடவடிக்கை எடுத்து உண்மையான தேசப்பற்றாளர்களை கண்டறியவுள்ளதாகவும் கம்மன்பில தெரிவித்துள்ளார்.
-(3)




