செய்திகள்

பொலிஸ் தகவல் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்பு முறையில் மாற்றம்

எனலொக் தொடர்பாடல் உபகரணத்திற்குப் பதிலாக டிஜிட்டல் தொடர்பாடல் உபகரணங்களைப் பயன்படுத்துவதற்காக கட்டாயமாக தேவைப்படும் அலைவரிசை வீச்சினை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு ஒதுக்கிக் கொள்வது தொடர்பாக அமைச்சரவையில் சமர்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது.
பொலிஸ் தகவல் மற்றும் தொடர்பாடல் கட்டமைப்பு தொகுதியினை அமைப்பதற்கு 2013ம் ஆண்டு அமைச்சரவை அனுமதி கிடைத்துள்ளது. எனினும் தற்போது வளர்ந்துள்ள நவீன தொழிநுட்ப விருத்திக்கமைவாக குறித்த கட்டமைப்பில் மாற்றம் ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. அதனடிப்படையில், குறித்த விடயம் தொடர்பில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சின் இணக்கப்பாட்டின் பெயரில் செயற் குழுவொன்றை நியமிப்பதற்கும், எனலொக் தொடர்பாடல் உபகரணத்திற்குப் பதிலாக டிஜிட்டல் தொடர்பாடல் உபகரணங்களைப் பயன்படுத்துவதற்காக கட்டாயமாக தேவைப்படும் அலைவரிசை வீச்சினை இலங்கை தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இலங்கை பொலிஸ் திணைக்களத்துக்கு ஒதுக்கிக் கொள்வது தொடர்பில் சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்னாயகவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.