பொலிஸ் மா அதிபர் தொலைபேசியில் ”சார்” என அழைப்பது பாடசாலை ஆசிரியராகவும் இருக்கலாம் : என்கிறார் கிரியெல்ல
பொலிஸ் மா அதிபரின் சர்ச்சைக்குறிய தொலைபேசி உரையாடலின் போது அவரால் ”சேர்” என அழைக்கப்பட்டவர் பாடசாலையின் ஆசிரியராகவும் இருக்கலாம் என சபை முதல்வரான அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் ஜே.வி.பி. தலைவருமான அநுரகுமார திசாநாயக்க எம்.பி. இரத்தினப்புரியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது பொலிஸ் மா அதிபருக்கு வந்த தொலைபேசி அழைப்பொன்று தொடர்பாக பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சி பிரதம கொறடாவும் ஜே.வி.பி. தலைவருமான அநுரகுமார திசாநாயக்க எம்.பி. எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் கிரியெல்ல மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
பொலிஸ் மா அதிபருக்கு சார் ஒருவர் உத்தரவிடுகிறார். அந்த உரையாடலில் குறிப்பிடப்படும் நிலமே முன்னாள் ஆட்சியின் போதான உயர்மட்ட குடும்பத்தின் உறவினரான, கனிம மணல் கூட்டுத்தபானத்தின் பணிப்பாளராகவும் மற்றும் தலைவராகவும் பதவி வகித்திருக்கிறார். அது தொடர்பில் பல குற்றச்சாட்டுக்கள் எஃப்.சி.ஐ.டி.யில் இருக்கிறது. அவ்வறான ஒருவரை கைதுசெய்ய வேண்டாம் என்று உத்தரவிட்டது அமைச்சரா? பொலிஸ் மா அதிபருக்கு இருக்கும் சார் அமைச்சராக இருக்க வேண்டும் அல்லது பிரதமராக இருக்க வேண்டும் என்றே நான் கருதுகிறேன். என அவர் தெரிவித்துள்ளார்.
இதன்போது பதிலளித்த லக்ஷமன் கிரியெல்ல சார் என்றால் பாடசாலையின் ஆசிரியராகவும் இருக்க முடியும். நாம் எமது ஆசிரியர்களை இன்னும் சார் என்று தான் அழைக்கிறோம்” என்று தெரிவித்தார். -(3)




