செய்திகள்

போதைப்பொருளுடன் தெற்கு அரசியல்வாதிகளுக்கும் தொடர்பு

போதைப்பொருள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தெற்கின் அரசியல் வாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (22) பிற்பகல் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பாதாள செயற்பாடுகள் மற்றும் போதைப் பொருள் வியாபாரத்துக்கு அரசியல் ஆசீர்வாதம் மற்றும் அரசியல் தொடர்புகள் இருக்கின்றன. இப்போது நாங்கள் இந்த அரசியல் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவந்துள்ளோம். இப்போது தங்காலையில் மூன்று லொறிகளில் போதைப் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த குற்றச்செயல்களுடன் அரசியலுக்கு தொடர்புள்ளதாக தெரிய வருகின்றது. குறிப்பாக தெற்கு அரசியல்வாதிகளுக்கு தொடர்புகள் உள்ளமை தெரியவந்துள்ளது என கூறியுள்ளார்.